பருப்பு,சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி.

0

மைசூர் பருப்பு மற்றும் சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய குறித்த பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினூடாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட்களை உள்நாட்டில் அதிகளவு விற்பனை செய்வதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து சீனி மற்றும் மைசூர் பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply